 Photo Gallery விஜய் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் புகழாரம் சூட்டினார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து தரணி டைரக்ஷனில் விஜய் நடித்த `குருவி' படம் 150 நாட்கள் ஓடியது. இதையொட்டி, அந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பாலசந்தர் விஜயின் ஸ்டார் அந்தஸ்தைப் பாராட்டிப் பேசினார்.
Photo Gallery விஜய் வருங்கால சூப்பர் ஸ்டார் என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் புகழாரம் சூட்டினார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து தரணி டைரக்ஷனில் விஜய் நடித்த `குருவி' படம் 150 நாட்கள் ஓடியது. இதையொட்டி, அந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. இந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய பாலசந்தர் விஜயின் ஸ்டார் அந்தஸ்தைப் பாராட்டிப் பேசினார்.விஜய் பல பரிமாணங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு எதிர்கால சூப்பர் ஸ்டார் என்று நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். தனிமனித ஒழுக்கம், அனைத்து நண்பர்களையும் ஒரே மாதிரியாக பார்க்கும் நல்ல குணம் ஆகிய நற்பண்புகள்தான் விஜய் உயர்வுக்குக் காரணம். அவருக்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது” என்றார் கே.பி.
முன்னதாக, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையுமë வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் நடிகர் விஜய் நன்றி கூறினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் இராம நாராயணன், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, விவேக், நடிகை த்ரிஷா, டைரக்டர் தரணி, இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகியோரும் பேசினார்கள்.
`குருவி' படத்தின் மூலம் கிடைத்த லாபத் தொகையில் இருந்து உடல் ஊனமுற்றோர், முதியோர், அனாதைகள், மன வளர்ச்சி குன்றியோர் இல்லங்கள் உள்ளிட்ட 6 சமூக சேவை மையங்களுக்கும், மகாலட்சுமி என்ற இதய நோயாளிக்கும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தலா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். இந்தத் தொகையை அவருடைய தாயார் துர்கா ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அமைப்புகளின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me