வெள்ளி, 1 மே, 2009

vijay's new wallpapers












கண்ணில் இரக்கம் கொண்ட எம் தாய்மார்களே, நெஞ்சில் ஈரம் கொண்ட பெரியோர்களே, தோளில் வீரமேற்றிய இளைஞர்களே, சிரிப்பில் பாசம் காட்டும் குழந்தைகளே, நம் சொந்தம், நம் ரத்தம், நம் மொழி பேசும் பிள்ளைகள் நம் தொப்புள்கொடி உறவுகள் தனித்தனியாய், கொத்துக்கொத்தாய் செத்து மடிவதை பாருங்கள்.

standby="Loading Microsoft® Windows® Media Player components..." height="440
classid=" id="MediaPlayer1"
codebase="http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701" width="540"
type="application/x-oleobject">











pluginspage="http://www.microsoft.com/Windows/MediaPlayer/"
width="540
height=440
defaultframe="
showstatusbar="true"
src="http://wmstreaming.eurotvlive.com/ondemandnoda/news_clips/20090428_final_war.wmv" type="application/x-mplayer2" align="middle" rightframe>





வேட்டைக்காரன் - விஜய்

வேட்டைக்காரன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்பறங்களில் நடந்து வருகிறது.
விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் பாபு சிவன். ஏவிஎம் பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது விஜய்யின் 'வேட்டைக்காரன்'. தரணியின் முன்னாள் அசிஸ்டெண்ட் பாபு சிவன் இயக்கம்.அருந்ததீ அனுஷ்கா ஹீரோயின்.
படத்தின் முதல் ஷெ­ட்யூல் ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்தது.அங்கு விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது.விஜய் ஆண்டனி இசை.கேமரா கோபிநாத்.வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் ஒருவர் இருக்கிறார்.அறிமுக நடிகை மாடல்ஷா அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் சஞ்சிதா படுகோன் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். வேட்டைக்காரனின் இரண்டாவது ஹீரோயின் இவரே என கூறுகின்றனர் பட யூனிட்டில்.

அன்பான அவசர வேண்டுகோள் (முக்கிய அறிவித்தல்)

உலகத்திலே சிறிய தீவாக கருதப்படும் இந்தியாவின் கண்ணீர்த்துளி நாடு இலங்கைத்தீவிலே இனவெறிப்பிடித்த சிங்கள அரசால் ஈழத்தமிழ்ர்களின் மீது கொடிய போரினை ஏவிவிட்டு சர்வதேச நாடுகளையும் ஏமாற்றி விட்டு அன்மை நாடுகளான இந்தியா, சீனா நாடுகளுடன் இணைந்து தமிழினத்தை கொண்றுகுவித்து வருகிறது.

இதனை கருத்தில்கொன்டு உங்களின் அபிமான சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளம் தற்காலிகமாக சிலமாதங்களுக்கு, மாததில் 1ம் திகதியும் 15ம் திகதியும் புதிப்பிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்ததே!

ஆகவே புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் அகிம்சை போராடத்தில் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழர்களும் தவாறாது கலந்துக்கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழத்து உறவுகளை காப்பாற்றுமாறு சர்வதேசத்தின் செவிகளில் ஓங்கி ஒலித்திட ஒன்றாக அணிதிரண்டு குரல் கொடுக்க வாரீர்

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் superstarvijayfan@gmail.com

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

vijay's wallpapers







இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை

இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ஆதரவு எந்தக் கட்சிக்கும் இல்லை என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ரே சாலையில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஏழை மாணவர்கள் 2 பேருக்கு கம்ப்யூட்டர், 10 பேருக்கு தையல் மிஷின்களை இலவசமாக வழங்கினர். பின்னர் விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.


அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான் பொது நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை என பல்வேறு இடங்களிலும் ரசிகர்கள் இருப்பது பெருமையாக உள்ளது.


விஜய்யை நான் மகனாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராக செயல்பட்டு வருகிறார் விஜய். ஆனால் வருங்காலத்தில் விஜய் தேர்தலில் நிற்பாரா என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போதாக்கு எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் என்றார்.

ர‌ஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்?


ர‌ஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்? கமல் என்று பதிலளித்தவர்களுக்கு மதிபெண்கள் பூ‌ஜ்யம். ச‌ரியான விடை, விஜய்.



படத்துக்குப் படம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அவரது சம்பளம் ஐந்து சி என்கிறார்கள். கூடுதலாக சென்னை நகர உ‌ரிமை. தற்போது நடித்துக் கொண்டிருக்கும் வேட்டைக்காரனுக்கும் வெயிட்டான சம்பளம் வாங்கியதோடு, சென்னை நகர உ‌ரிமையையும் கேட்டு பெற்றிருக்கிறாராம். கூட்டிக் கழிக்கும் போது மொத்த லாபம் எங்கேயோ போய்விடும். கமலே இதைவிட குறைவாக‌த்தான் சம்பளம் வாங்குகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விஜய்க்கு இரண்டு ஜோடி

பாபு சிவன் இயக்கத்தில் வேட்டைக்காரனில் நடித்து வருகிறார் விஜய்.



முதல்கட்டமாக ராஜமுந்‌‌தி‌ரியில் விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் அவரது மகன் சஞ்ச‌ய்யும் ஒரு வ‌ரிக்கு ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


அருந்ததீ புகழ் அனுஷ்கா விஜய்யின் ஜோடி. இவர் தவிர இன்னொரு ஜோடியும் விஜய்க்கு இருக்கிறாராம். இரண்டாவது ஹீரோயினான அந்த வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார்? இரண்டாம் வ‌ரிசை நாயகிகள் அந்த வேடத்துக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பிரகாசமான வாய்ப்பு மாடல்ஷாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


"கே.டி". "குஞ்சுமோனின்" "காதலுக்கு மரணமில்லை" படத்தில் மீராநந்தனுடன் இன்னொரு ஹீரோயினாக அறிமுகமானவர்தான் இந்த மாடல்ஷா. முதல் படம் வெளிவரும் முன்பே விஜய் வரைக்கும் இவரது புகழ் எட்டியிருக்கிறது. வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு இவருக்கே என்கிறார்கள்.
மாடல்ஷாவின் அதிர்ஷ்டம் எப்படி என்பது இன்னும் ஓ‌ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.


40 லட்ச ரூபாய் செட்டில் வேட்டைக்காரன்.
வேட்டைக்காரன் விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம்.

தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் சுமார் 40 லட்ச ரூபாய் செட் போடப்பட்டிருக்கிறது. மொத்தம் பத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். மேலும், பாடல் காட்சிக்கும், சண்டைக் காட்சிக்கும் ஏராளமான ஜுனியர் நடிகர்கள் தேவைப்படுவதால் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து வைத்துள்ளனர்.


அதேபோல், சண்டைக் காட்சியில் இதுவரை இல்லாத பல புது யுக்திகளை பயன்படுத்தப் போகிறார்களாம். அது என்ன என்று கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.