வியாழன், 25 செப்டம்பர், 2008

vilu shooting gallery






















புதன், 24 செப்டம்பர், 2008

கெளரவ வேடத்தி்ல் விஜய் நடித்த பந்தயம் திரைவிமர்சனம்




நடிப்பு: நிதின் சத்யா, சிந்து துலானி, ராதிகா, பிரகாஷ்ராஜ், மேக்னா நாயுடு, கெளரவ வேடத்தி்ல் விஜய்
இசை: விஜய் ஆண்டனி



இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகர்



தயாரிப்பு: ஷோபா சந்திரசேகர்



வெளியீடு: வி.இதேஷ் ஜபக்



உசிலம்பட்டியில் இருக்கும் சிறுவன் விஜய் ரசிகனாக யாருக்கும் அடங்காமல் அடங்காப்பிடாரியாக வளர்கிறான். விஜய் ரசிகர் பிளஸ் கல்லூரி மாணவர் நிதின் சத்யா. கல்லூரியின் கரஸ்பான்டன்ட் பிரகாஷ்ராஜின் தங்கையை காதலித்த, அவரது நண்பன் கொலை செய்யப்படுகிறார்.பிரகாஷ் ராஜை பழிவாங்க அவரது விசுவாசியாக நடித்துக் கொண்டே, அவர் தங்கை சிந்து துலானியை காதலிக்கிறார் நிதின். தங்கை நிதினை காதலிப்பது தெரியாமல் அவளை யார் காதலிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து தீர்த்துக்கட்டும் பொறுப்பை நிதினுக்கே வழங்குகிறார் பிரகாஷ்ராஜ்.கடைசியில் விசுவாசியும், தங்கையின் காதலனும் ஒரே ஆள்தான் என்று உண்மை தெரிய வரும்போது தனது வில்லன் ஆட்டத்தை தொடங்குகிறார் பிரகாஷ்ராஜ். அப்புறம் என்னாச்சு? என்பது கிளைமாக்ஸ்.
கவுரவ வேடத்தில் விஜய் வரும் காட்சிகளும், ரெண்டு ரீலுக்கு ஒரு குத்துப்பாட்டும் கமர்ஷியல் ஊறுகாய்.
விஜய்யை காண ஊரைவிட்டு ஓடிவரும் குட்டி ரசிகர்களுக்கு 'நல்லா படிங்க' என்று அட்வைஸ் செய்கிறார்
கெளரவ வேடத்தி்ல் வரும் விஜயின் பாத்திரம் மட்டுமே பந்தயம் படத்துக்கு மிகவும் உறுதுனையாக இருக்கிறது எனலாம், விஜய் வரும் காட்சிகளிலும் விஜய் பற்றிசொல்லு கருத்துக்களாளும் பந்தயம் நிச்சயம் ஜெயிக்கும்.

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

kuruvi super hit days 140th


'வேட்டைக்காரனி'ல் அசின்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் பஞ்சம். நயன்தாரா, ஸ்ரேயா, த்ரிஷா... இந்த மூவரையும் விட்டால் முன்னணி இளம் ஹீரோக்களுக்கு வேறு ஜோடிகளில்லை.
மூவருடன் நால்வராக அசினை சேர்க்கலாம் என்றால் அவர், இந்தியை விட்டு நகர்வதாயில்லை. இந்தப் பின்னணியில் விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள கதாநாயகி சிக்கலை யோசித்தால் அதன் தீவிரம் தெரியும்.
'வில்லு'வில் நயன்தாரா நடிப்பதால் அவரை போடமுடியாது. 'குருவி' த்ரிஷா மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்க வழியில்லை. 'அழகிய தமிழ் மகனி்'ல் இப்போதுதான் விஜய்யுடன் டூயட் பாடியிருக்கிறார் ஸ்ரேயா.

இந்நிலையில் 'வேட்டைக்காரனி'ல் இலியானாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல். உண்மை என்ன என்று விசாரித்ததில் தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. தயாரிப்பு தரப்பை பொறுத்தவரை அவர்கள் இலியானாவை குறித்து யோசிக்கவே இல்லையாம். அவர்களின் ஒரே குறி, அசின்.
'லண்டன் ட்ரீம்ஸ்' படத்துக்காக வெளிநாடு சென்றிருப்பவரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். விஜய் படம் என்பதால் அவரும் உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார்.
நவம்பரில் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு தொடங்குகிறது.


தளபதியும், தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்?



தளபதியும் தலயும் ஒரே நேரத்தில் வந்தால் என்னாகும்? ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு மண்டை உடையும்.
விஜய், அஜீத் ஆகிய இருபெரும் ஹீரோக்களுக்கு ஒரே மாதிரி மார்க்கெட், ஒரே மாதிரி சம்பளம், ரசிகர்களும் ஒரே மாதிரி என்பதுதான் வியப்பு. தங்களது ஹீரோ நடித்த படங்கள் திரைக்கு வரும் நாளில் கட் அவுட்டுக்கு மாலை, பீர் அபிஷேகம் என்று கலகலப்புக்கு குறை வைக்க மாட்டார்கள் இந்த ரசிகர்கள். இந்த நிலையில் அஜீத்தின் ஏகனும், விஜயின் வில்லும் வேக வேகமாக வளர்ந்து வருகின்றன. வருகிற தீபாவளிக்கு ஏகன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம். வில்லு படத்தையும் இதே நிறுவனம் தயாரித்து வருவதால், விஜயை பொங்கலுக்கு வரச் செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதற்கிடையில் வில்லு படத்தின் இயக்குனர் பிரபுதேவாவின் மகனுக்கு உடல் நிலை சரியில்லையாம். இதனால் அவர் மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் வேகமும் சற்று குறைந்திருக்கிறதாம். எனவே பொங்கலுக்குதான் வில்லுவின் வருகை. அக்டோபர் 11- ந்தேதி ஏகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சமீப காலங்களாக பேச்சை முற்றிலுமாக குறைத்திருக்கும் அஜீத், இந்த விழாவில் அதிகம் பேசுவாரா? அளந்து பேசுவாரா? இதுதான் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

வியாழன், 11 செப்டம்பர், 2008

Vijay’s “yes” to Prakash Raj

click hear for vijay's starys

http://cinemaexpress.com/serials/serial7.asp

If things go as planned for Prakash Raj, he may sign the Ilayathalapthi Vijay for his next project. Prakash Raj told reporters that his production house Duet Movies is occupied by the exit of the songs in the film Abhiyum Naanum with Trisha, after which another film entitled "Mayilu" will be leaving soon. Another film, entitled "Inithu Inithu", is also under preparation. after these 3 projects, the versatile actor said that Duet Movies has all prepare to produce a film which has Vijay in the lead role. PrakashRaj added that all the details of this project will be announced soon. After the success of Ghilli Sivakasi and we can expect another success.


things go well for Prakash Raj, he may sign up Ilayathalapthi Vijay for his next venture. Prakash Raj told reporters that his production house Duet Movies is now busy with the audio release of Abhiyum Naanum, following which another movie Mayilu will hit screens. Yet another film, Inithu Inithu, is also in the pipeline he disclosed.
Meanwhile, the versatile actor said that his Duet Films is all set to produce a film that will have Vijay in the lead. Prakash Raj added that all further details about this project will be announced soon


பிரகாஷ் ராஜ் படத்திற்கு விஜய்யின் கால்ஷீட்

எட்டு மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து ஹாய் சொல்கிறவர் பிரகாஷ் ராஜ். பங்சுவாலிட்டி விஷயத்தில் பாலிவுட் ஸ்டார்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பிரகாஷ் ராஜூக்கு காத்திருந்து அலுத்துப் போன நடிகர்கள் பட்டியலில் கமலும் உண்டு. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படப்பிடிப்பின் போது, கமல் மேக்கப்போடு காத்திருக்க, பல மணிநேரம் கடுக்காய் கொடுத்த பின்பே காட்சி தருவார் பிரகாஷ் ராஜ். லேட்டாக வருவது அவரது பிறவி குணம் என்று பொறுத்து வந்தது திரையுலகம்.
ஆச்சரியம் என்னவென்றால் எஸ்.ஏ.சந்திரசேகரனின் 'பந்தயம்' படத்திற்கு கால் மணி நேரம்கூட யாரையும் காக்க வைக்கவில்லையாம் இவர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாற்பது நாளும் பங்சுவாலிட்டியை கடைபிடித்த ஒரே நபர் பிரகாஷ் ராஜ்தானாம். இந்த உலக அதிசயம் எப்படி நடந்தது?
எஸ்.ஏ.சி.யிடம் விஜய்யின் கால்ஷீட் கேட்டிருந்தார் பிரகாஷ் ராஜ். அவரது மனம் கோணாமல் நடந்தால்தானே கால்ஷீட் சித்திக்கும்.
'பந்தயம்' படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்துக்கு விஜய்யின் கால்ஷீட் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார் எஸ்.ஏ.சி. உற்சாகத்தில் இருக்கிறார் மிஸ்டர் பங்சுவாலிட்டி.




பொங்கலுக்கு வில்லு!



ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் ஏகன் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
இந்தியில் ஷாருக்கான் நடித்த மெய்ன் ஹ¤ன் னா படமே ஏகனாக உருவாகிறது. ராஜு சுந்தரம் இயக்குகிறார். தீபாவளிக்கு முன் ஏகன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடவே தயாரிப்பாளர் மற்றும் அஜித்தின் விருப்பம். முன்னதாக அக்டோபர் பதினொன்று படத்தில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு விஜயின் வில்லு வெளியாகும், தீபாவளி ரேஸ் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பு நடக்கப் போவதில்லை. வில்லு படப்பிடிப்பு இன்னும் முடியாததால் பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.
ஏகன், வில்லு இரண்டின் தயாரிப்பாளரும் ஒருவரே என்பதும் இதற்கு முக்கிய காரணம்.





வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களுடன் விஜய்!

பாங்காங்கில் இருக்கிறார் விஜய். உடன் நயன்தாரா. சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சி முடிந்தபின் இயக்குனர் பிரபுதேவா லொகேஷனை பாங்காங்கிற்கு மாற்றியுள்ளார்.
விஜய் - நயன்தாரா டூயட்டை இங்குள்ள எழில் கொஞ்சம் தீவுகளில் படமாக்குகிறார்கள். அப்படியே ஒரு சண்டைக் காட்சியையும். ஆக்சன் காட்சிகளில் அயல்நாட்டு சண்டைக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்பளிப்பது, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பேஷன். ரஜினியின் எந்திரனில் கூட ஒருவர் இருக்கிறார், யென் ஹு பிங்.
வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனராம். ஹாலிவுட் படங்களுடன் மோத இந்த மாற்றம் அவசியமானதுதான்.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

விஜய்க்கு ஹீரோயின் யார்?





























வேட்டைக்காரன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைககள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.
ஏவி.எம். பாலசுப்ரமணியத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விஜய் கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் படம்தான் உருவாகாமால் இருந்து வந்தது. முரட்டுக்காளையின் ரீமேக்கில் பாலசுப்ரமணியத்திற்கு விஜய் நடித்துக் கொடுப்பார் என முன்பு கூறப்பட்டது. ஆனால் அது பின்னர் கைவிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பாலசுப்ரமணியம் படத்திற்கு ரெடியாகி விட்டார் விஜய். வேட்டைக்காரன் என இப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டில் இது என்பதால் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்போது ஹீரோயின் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். விஜய்யின் முதல் சாய்ஸ் ஆசின். எனவே ஆசினை அணுகினர். அவரோ கை நிறைய இந்திப் படங்களுடன் இருப்பதாக கூறியுள்ளார். கொஞ்சம் காத்திருக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார். ஆனால் காத்திருப்புக்கு நேரம் இல்லை என்று விஜய் தரப்பில் கூறப்பட்டு விட்டதாம்.
இதையடுத்து இலியானாவை அணுகினர். இவரை ஏற்கனவே இருமுறை தனது படங்களில் நாயகியாக்க முயன்றார் விஜய். இருமுறையும் டேக்கா கொடுத்து விட்டார் இலியானா. விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே அவர் டேக்கா கொடுத்து வருகிறார் என்பது வேறு விஷயம்.
இந்த முறையும் இலியானா, ஸாரி சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து யாரை அணுகுவது என்ற யோசனையில் விஜய் தரப்பு உள்ளதாம்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2008

அபிமான விஜய் ரசிகர்களே !!!


உங்களின் அபிமான நடிகன் விஜய் ரசிகர்களே! உங்களின் உயர்வான எண்ணங்கள், விமர்சனங்கள் அல்லது உங்களின் கருத்துக்கள் எதுவாயின் இங்கு வரவேற்க்க படுகிறது, அனுப்பிவைக்கவேன்டிய இமையில் (email )முகவரி superstarvijayfans@gmail.com நன்றி...

Villu to beautiful Bangalore


Villu Starring Ilaya Thalapathi Vijay, glamour doll Nayanthara and our renowned comedian Vadivelu is to be shot in Bangalore city for approximately fifteen days.Dirctor Prabhu Deva join hands with Vijay once again after his tremendous success with the same actor in pokkiri.Villu was shot in most exquisite locations abroad and in India. Shooting in Bangalore mainly consists of fight scenes and few other scenes as well. The movie certainly includes Vijay's specialty "kuthu songs" with blazing dance sequence. Vijay fans can expect a lot from their beloved actor as it will be also a perfect entertainer with commercial aspects needed for his movie.