click hear for vijay's starys
http://cinemaexpress.com/serials/serial7.asp
If things go as planned for Prakash Raj, he may sign the Ilayathalapthi Vijay for his next project. Prakash Raj told reporters that his production house Duet Movies is occupied by the exit of the songs in the film Abhiyum Naanum with Trisha, after which another film entitled "Mayilu" will be leaving soon. Another film, entitled "Inithu Inithu", is also under preparation. after these 3 projects, the versatile actor said that Duet Movies has all prepare to produce a film which has Vijay in the lead role. PrakashRaj added that all the details of this project will be announced soon. After the success of Ghilli Sivakasi and we can expect another success.
things go well for Prakash Raj, he may sign up Ilayathalapthi Vijay for his next venture. Prakash Raj told reporters that his production house Duet Movies is now busy with the audio release of Abhiyum Naanum, following which another movie Mayilu will hit screens. Yet another film, Inithu Inithu, is also in the pipeline he disclosed.
Meanwhile, the versatile actor said that his Duet Films is all set to produce a film that will have Vijay in the lead. Prakash Raj added that all further details about this project will be announced soon
பிரகாஷ் ராஜ் படத்திற்கு விஜய்யின் கால்ஷீட்
எட்டு மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து ஹாய் சொல்கிறவர் பிரகாஷ் ராஜ். பங்சுவாலிட்டி விஷயத்தில் பாலிவுட் ஸ்டார்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பிரகாஷ் ராஜூக்கு காத்திருந்து அலுத்துப் போன நடிகர்கள் பட்டியலில் கமலும் உண்டு. 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படப்பிடிப்பின் போது, கமல் மேக்கப்போடு காத்திருக்க, பல மணிநேரம் கடுக்காய் கொடுத்த பின்பே காட்சி தருவார் பிரகாஷ் ராஜ். லேட்டாக வருவது அவரது பிறவி குணம் என்று பொறுத்து வந்தது திரையுலகம்.
ஆச்சரியம் என்னவென்றால் எஸ்.ஏ.சந்திரசேகரனின் 'பந்தயம்' படத்திற்கு கால் மணி நேரம்கூட யாரையும் காக்க வைக்கவில்லையாம் இவர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாற்பது நாளும் பங்சுவாலிட்டியை கடைபிடித்த ஒரே நபர் பிரகாஷ் ராஜ்தானாம். இந்த உலக அதிசயம் எப்படி நடந்தது?
எஸ்.ஏ.சி.யிடம் விஜய்யின் கால்ஷீட் கேட்டிருந்தார் பிரகாஷ் ராஜ். அவரது மனம் கோணாமல் நடந்தால்தானே கால்ஷீட் சித்திக்கும்.
'பந்தயம்' படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்துக்கு விஜய்யின் கால்ஷீட் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார் எஸ்.ஏ.சி. உற்சாகத்தில் இருக்கிறார் மிஸ்டர் பங்சுவாலிட்டி.
பொங்கலுக்கு வில்லு!
ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் ஏகன் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது.
இந்தியில் ஷாருக்கான் நடித்த மெய்ன் ஹ¤ன் னா படமே ஏகனாக உருவாகிறது. ராஜு சுந்தரம் இயக்குகிறார். தீபாவளிக்கு முன் ஏகன் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடவே தயாரிப்பாளர் மற்றும் அஜித்தின் விருப்பம். முன்னதாக அக்டோபர் பதினொன்று படத்தில் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தீபாவளிக்கு விஜயின் வில்லு வெளியாகும், தீபாவளி ரேஸ் களை கட்டும் என்ற எதிர்பார்ப்பு நடக்கப் போவதில்லை. வில்லு படப்பிடிப்பு இன்னும் முடியாததால் பொங்கலுக்கு பட வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.
ஏகன், வில்லு இரண்டின் தயாரிப்பாளரும் ஒருவரே என்பதும் இதற்கு முக்கிய காரணம்.
வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களுடன் விஜய்!
பாங்காங்கில் இருக்கிறார் விஜய். உடன் நயன்தாரா. சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சி முடிந்தபின் இயக்குனர் பிரபுதேவா லொகேஷனை பாங்காங்கிற்கு மாற்றியுள்ளார்.
விஜய் - நயன்தாரா டூயட்டை இங்குள்ள எழில் கொஞ்சம் தீவுகளில் படமாக்குகிறார்கள். அப்படியே ஒரு சண்டைக் காட்சியையும். ஆக்சன் காட்சிகளில் அயல்நாட்டு சண்டைக் கலை நிபுணர்களுக்கு வாய்ப்பளிப்பது, தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பேஷன். ரஜினியின் எந்திரனில் கூட ஒருவர் இருக்கிறார், யென் ஹு பிங்.
வில்லு சண்டைக் காட்சியில் சீன சண்டைக் கலைஞர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனராம். ஹாலிவுட் படங்களுடன் மோத இந்த மாற்றம் அவசியமானதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me