திங்கள், 29 மார்ச், 2010

நானும் உங்களில் ஒருத்தன், இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன்.






அகில சூப்பர் ஷ்டார், நற்பணி நாயகன், இளையதளபதி விஜயின் நற்பணியின் தொடர்ச்சியாக இன்று திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டனர்.

அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

பின்னர், திருமண விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.

நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். அதுதான் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு. அவள் இன்று இருந்திருந்தால் உங்கள் வயதுதான் இருக்கும். ஆனால் இப்போது 25 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க மாட்டேன்.

வலையில் சிக்க புறா இல்லை… நான் சுறா!

சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள் அல்ல. உன் வலையில் விழுவதற்கு புறா அல்ல. நான் சுறா என்பேன். நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன். தனித்து என் பயணத்தைத் தொடர்வேன். என்றும் உங்களில் ஒருவனாக இருப்பேன் என்றார்..

சுறா படத்திலிருந்து அவரை ஒரு பாடல் பாடச் சொல்லி வற்புறுத்தினர் ரசிகர்கள். அதற்கு அவர், “சுறா படப் பாடல்கள் இனிமேல்தான் வெளியாக உள்ளன. எனவே நான் இப்போது அதைப் பாடக் கூடாது. உங்களுக்காக வேட்டைக்காரன் பாடலைப் பாடுகிறேன்” என்று கூறியவர், “என்னுச்சி மண்டைல சுர்ருங்குது…” பாடலைப் பாடிக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me