மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
சுறா விஜயின் 50வது படம் என்பது ஏதிர்பார்ப்பு புயலை விட எகிறுகிறது, தமிழ் நாட்டு குட்டி சூப்பர் ஷ்டார் என்று அன்புடன் அழைக்கும் தமிழர்களின் குடும்பத்தின் ஒருவராக கருதப்படும், பக்கத்து வீட்டு பைய்யனாகவே தோற்றம் அளிக்கும் இளையதளபதி விஜயின் 50 வது படம் பிரமான்ட தாயாரிப்பிலும், எதிர்பார்ப்பிலும் விரைவில் வெளிவருகிறது.
விஜயின் 49வது படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ச் விஜயின் 50வது படத்தையும் வெளியிடுகிறது
எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு எம்.எம்.பிரபு
சுறா மீனைக் குறிக்கும் இந்த படத்தில் விஜய் மீனவராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா
படத்தின் கதையும் கருவும், கடலும் கடல் சாந்தவைகளுமாக இருப்பதால் சூட்டிங்கை பெரும்பாலும் கடலோர பகுதிகளில் நடத்தியுள்ளார் டைரக்டர் ராஜ்குமார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் படமாகி உள்ளன. பாடல் காட்சிகள் மட்டும் தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்படி வெளிநாட்டில் எடுத்துள்ளனர்
இதே வேளை 'திருப்பாச்சியில்' இடம்பெற்ற 'கும்பிட போன தெய்வம்...' பாடலைப்போல் ஒரு பாடலை மணிசர்மா இசையில் எடுத்திருக்கிறார்கள். இதற்காக புதுச்சேரி அருகே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து மூன்று மும்பை அழகிகளுடன் விஜய் ஒரு சுப்பர் குத்து ஆடியிருக்கிறார்.
ஏற்ற தாழ்வுகளால் விஜய் படங்களுக்கு முன்பில்லாத மவுசு கிடைத்திருக்கின்றது. வடிவேல், இணைந்திருப்பதால் சுறா பட எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை தருவதில் எஸ்.பி. ராஜ்குமார் சிறந்தவர். நம்பிக்கை தரும் கூட்டணி அதிகரிப்பதால் வெற்றியும் உறுதிப்படுத்தப்படுகிறது.
சுறாவின் ஆடியோ வெளியீடு 26 மார்ச்மணிசர்மா இசையில் வெளியாகும் சுறா திரைப்பட பாடல்கள் இம்மாதம் 26ந் தேதி மனதை சூறடிக்க வெளிவருகிறது.
விஜய் நாளையதீர்ப்பு முதல் இன்றைய சுறா வரையும்?
விஜயின் 50வது பிரமான்ட தயாரிப்பில் ஏப்ரல் 14ந் தேதி வெளியீட்டை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற வழைப்பூவில் விஜயின் அந்தமும் அகரமும், நாளைய தீர்ப்பு முதல் சுறா வரை என்ற மேல் பார்வையாக ஏப்ரல் 14ந் தேதி இவ் வழைப்பூவில் வெளியாகிறது.
ஆகவே உங்களின் பங்களிப்பையும் செய்யவும், விஜய் இது வரை நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்தது, வெறுத்தது, விஜயின் சினிமா விமர்சனங்கள், வாழ்த்துக்கள், கருத்துக்கள் எதுவாயினும் இந்த
superstarvijayfanz@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிவைக்கவும்.