நடிகர் : விஜய்.
நடிகை : அனுஷ்கா
நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலீம் கவுஸ் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : கோபிநாத்
இசை : விஜய் ஆண்டனி
கதை,திரைக்கதை, வசனம், டைரக்ஷன் : பாபு சிவன்.
விஜய் நடிப்பில், பாபு சிவன் இயக்கத்தில்,விஜய் ஆண்டனியின் இசையில், ஏ.வி. எமின், சன் நிறுவன வெளியீட்டில் வெளிவந்திருக்கும்,அமர்க்கள வெற்றி திரைப்படம் வேட்டைக்காரன்.
இது விஜயின் 49வது திரைப்படம்.
கில்லி, குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர்.
வேட்டைக்காரன் கதை விமர்சனம்
தூத்துக்குடியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்து இளைஞர் விஜய். நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தேவராஜ் பிடித்து போய் அவரைப்போல் போலீஸ் வேலையில் சேர ஆசைப்படுகிறார். சென்னை வந்து தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். ஆட்டோ ஓட்டி படிப்பு பீஸ் கட்டுகிறார்.
தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.
ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரி தேவராஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவராஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவராஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.
விஜய்யின் அறிமுகம்: முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். இப்படி பார்வையாளர்களே யூகித்து புரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.
கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எண்ட்ரி. தியேட்டரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.
விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து சிரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.
இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ... யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும்.
விஜய்யின் கல்லூரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்தத் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.
செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயாஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.
அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டைப் பூட்டி உயிரோடு எரிக்கிறார்கள். தேவராஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.
கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.
சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்திரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார்.
கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைரக்சனை கேட்டு கண் தெரியாத தேவராஜ் சரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.
பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரைக் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்ரிஷா மாதிரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு... அமர்க்கள திரைக்கதை.
பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.
தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்து, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுகிறார், இத்துடன் வேட்டை முடிகிறது.
குறிப்பிடதக்கது (+++++)
விஜய் அதிகம் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதும், அதில் சந்தர்ப்பத்தை சாதகமாக்கியும் நடிப்பதிலும் விஜயின் பரந்த மனமே இந்த வேட்டைக்கு காரனம்.
விஜய் நடித்த பல திரைப்படங்கள் வித்தியாசமான வெற்றியை கொடுத்திருந்தாலும்,இது ரசிகர்களின் விருந்தாக மட்டுமில்லை, வெற்றியின் மைகல்லாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வழக்கம் போல், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சென்றடையக்கூடிய வகையில்,காமெடி, அடிதடி,கதை,காதல் அலுப்பு தட்டாத நடன அம்சம் என்று தனது தனி நடிப்பினால் வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்து கூறும் பாடல் காட்சிகளுக்கு அந்த முறையிலே நடனம் ஆடி வசப்படுத்தியிருக்கிறார் என்றால் மிகையாகது.
வெற்றி படங்களின் வரிசையில் வேட்டைக்கரன் மட்டுமில்லை, வெற்றி இயக்குனர்கள் வரிசையில் இனைந்து இருப்பவர் பாபுசிவன்.
சன் பிக்சர்ஷ் இதுவரை காதலில் விழுந்தேன் தொடங்கி கன்டேன் காதலை வரைக்கும் வெளியிட்டு வசூலில் சதனை படைத்த சன், இதுவே முதல் முறையாக பெரிய நடிகரின் திரைபடத்தை வெளியிட்டு வசூலில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
குறிப்பிடதக்கது (---)
வித்தியாசமான திரைப்பட கதையை சொல்லிய விதம் சுறு சுறுப்பாகவும்,விறு விறுப்பகவும் அமைந்தாலும், வழக்கம் போல் கதையை ரவுடிகளுடன் இனைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குனர் பாபு சிவன், இதானல் கதை வெளிப்படையாக தென்படுவது மிக கடினம்.
வேட்டைக்காரன் நாயகி அனுஷ்க்காவுக்கு இதில் முக்கிய இடம் கொடுப்பதில் கஷ்ட்டபட்டிருக்கிறார் இயக்குனர்.
88.5/100
சூப்பர் ஷ்டார் நிர்வாக குழுவினர்
1 கருத்து:
100க்கு 88.5 மார்க். டேய், இது உனக்கே அநியாயமா படலே? தலைவர் படத்துக்கு 100க்கு 110 மார்க் குடுடா. அப்பவாது, 10, 15 பேர் இத படிச்சிட்டு படத்த பாக்க தியேட்டருக்கு வருவாங்க. எங்க ஊரு தியேட்டருல, யாருமே இல்லாத கடையில டீ ஆத்தர மாதிரி, கவுண்டரில் டிக்கட் கொடுப்பவர் தனியா உக்காந்திருப்பதை பாத்தா பரிதாபமா இருக்கு.
கருத்துரையிடுக
talk me