வெள்ளி, 26 செப்டம்பர், 2008

சூப்பர் ஸ்டார் ரஜினியை முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய்.

சென்னை லயோலா கல்லூரி எடுத்துள்ள கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள் வரிசையில் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் முதல் இரு இடங்களில் உள்ளனர். தற்போதைய
நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியை முந்தி முதலிடத்தை எட்டியுள்ளார் விஜய். லயோலா கருத்துக் கணிப்பில் மக்கள் மனம் கவர்ந்த நடிகராக மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருக்கிறார். அவருக்கு 21.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.ஜி.ஆர். நடித்த படங்களிலேயே தங்களைக் கவர்ந்த படம் நாடோடி மன்னன் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2வது இடத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருக்கிறார். அவருக்கு 18.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவாஜி படங்களிலேயே சூப்பர் படம் என அவர்கள் பாராட்டியுள்ளது பாசமலர்.
நடிகர் விஜய் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்குக் கிடைத்துள்ள ஆதரவு 16.4 சதவீதம் ஆகும். அவரது படங்களிலேயே கில்லிதான் மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முதல் முறையாக முந்தியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் இருக்கும் ரஜினிக்கு 16.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் படங்களிலேயே பாட்ஷாதான் மக்களுக்குப் பிடித்துள்ளதாம்.


Swing & Sway with Villu Crew

Prabhu Deva’s Villu is shaping on very well. Vijay and Nayanthara morphed in dance costumes are romancing for a duet song in a magnificent sets put up at Prasad Studio. This is the first time Ilaya Thalapthi and Nayan works together in lead roles. Nayanthara executed a folk song with Vijay in “Sivakasi” begins like “Kodambaakam Area vottu Poda Vaariya” that was a super hit. Need we say more?





விகடன் பேட்டி பிரபுதேவா!


விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ் - பிரபுதேவா!



''வில்லுக்கு விஜயன்னு சொல்வாங்கள்ல... இனிமே விஜய்னு மாத்திக்கலாம்!'' - பன்ச் டயலாக்குடன்தான் வரவேற்கிறார் பிரபுதேவா. காத்திருக்கவைக்காமல் வந்து வரவேற்கிற அபூர்வங்களில் ஒருவர். கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி அமர்கிற அதே துறுதுறு தேவா! ''வில்லுன்னா, வேகம். அதுவும் இது விஜய் எடுக்குற வில்லு. இன்னிக்கு விஜய் தமிழ்நாட்டோட பெரிய மாஸ் பாஸ். அதான், படத்தில் அவர் பேரே 'புகழ்'னு வெச்சோம்!'' எனப் புன்னகைக்கிறார்.



''விஜய் அரசியலுக்கு வரப்போறார்னு பேசுற அளவுக்கு ஆகிப்போச்சு. 'வில்லு'வில் என்னென்ன விஜய் வித்தை இருக்கு?''



''டான்ஸ், ஃபைட் மட்டுமில்லை... விஜய் பிரமாதமான பர்ஃபார்மர். ஒவ்வொரு கணத்தையும் கொண்டாட்டமாக்கிக் காட்ட ஆசைப்படுகிற ஆள் நம்ம 'புகழ்'. விஜய்க்கு 'வில்லு'... நிச்சயமா டபுள் 'போக்கிரி'!
பிரமாதமான கிராமம், அழகான வீடு, சந்தோஷமான குடும்பம்னு ஆரம்பிக்கும் படம். ரொம்பப் பொறுப்பான அழகுப் பையன் விஜய். அம்சமான கோயில் திருவிழா மாதிரி கொண்டாட்டமா போயிட்டிருக்கிற வாழ்க்கையில் பொளேர்னு நடக்கிற ஒரு சம்பவம்தான் படம். ஜான்வியா வர்றாங்க நயன்தாரா. மழைக்கு ஒதுங்க இடம் தேடி ஓடும்போது, திடீர்னு குறுக்கே குடையோட ஒரு அழகான பொண்ணு வந்து, என் குடைக்குள்ளே வான்னு இழுத்தா எப்பிடி இருக்கும். அப்படி ஓர் இளமை விளையாட்டு படத்தில் இருக்கு. விஜய் ஸ்டைலு இருக்கே... படம் வந்தா தமிழ்நாடே காலரைக் கடிக்கும்!''



''விஜய், நயன்தாரா, வடிவேலுன்னு டாப் ஸ்டார்களை எப்படி வளைச்சுப் போடுறீங்க?''



''சாமி, கண்ணு வைக்காதீங்க. 'வில்லு'க்கு விஜய்னு தீர்மானம் ஆனதும், 'சார் நயன்தாராவைக் கேளுங்க சார்!'னு என் அசிஸ்டென்ட்ஸ் கிட்டத்தட்ட கெஞ்சிட்டாங்க. காமெடின்னா இன்னிக்கு வடிவேலுதானே. எனக்கும் வடிவேலுவுக்கும் சேட்டையில நல்லா செட் ஆகும். தமிழ்ல எந்தப் படம் பண்ணாலும் எனக்கு நிச்சயம் அவர் வேணும். இன்னொரு பெரிய விசேஷம், ரவிவர்மன் கேமராவும் தேவிஸ்ரீப்ரசாத்தின் இசையும்!
பொதுவா, நான் எங்கே இருக்கணும், என்னெல்லாம் சாதிக்கணும்னு எதையும் என் பொறுப்பில் எடுத்துக்கிறதில்லை. காலையில் விபூதியை எடுத்து நெத்தியில் பூசிக்கும்போது வர்ற அமைதிதான், என்னிடம் அடுத்த நாள் வரைக்கும் ஓடுது. நிஜமா நம்புங்க... எனக்கு எப்பவுமே பெரிசா பிளான் கிடையாது!''
''இந்தி 'போக்கிரி' என்னாச்சு..?''
''இன்னும் இரண்டே பாடல்கள்தான் பாக்கி. சல்மான்கான் பக்கா ஆக்ஷன் செய்து ஏழெட்டு வருஷத்துக்கு மேலே ஆச்சு. அதனால், ஒவ்வொரு ஷாட்டையும் பிரமாண்டமாகச் செய்திருக்கோம். முழுப் படத்தையும் போட்டுப் பார்த்த பின்னாடி சல்மான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்லை. இந்திக்கேத்த மாதிரி இன்னும் வேகமா வெளுத்திருக்கோம்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me