
குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me