
'இந்த கதையை அப்பா என்கிட்ட சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. காரணம், இது எனக்கு பொருத்தமான கதை. ஆனால் எனக்காக அவர் வெயிட் பண்ண தயாராக இல்லை. நிதின் சத்யாவை வைத்து படத்தை துவங்கி விட்டார். நானும் நிதின் சத்யாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன். எனக்கு நிதின் சத்யாவிடம் பிடித்தது அவரது கண்கள்தான். எனக்கு சிறிய கண்கள் என்பதால் பெரிய கண்கள் உள்ளவர்களை எனக்கு பிடிக்கும். விஜயகாந்த் சாருக்கும் அப்படிதான் கண்கள் இருக்கும். இந்த படம் பிரமாதமான ஆக்ஷன் படம். நிதின் சத்யாவுக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும்' என்றார் விஜய்.
படத்தில் நடித்த நடிகர்கள், எஸ்.ஏ.சி யின் கண்டிப்பை பற்றி கொஞ்சம் ஓவராகவே அச்சப்பட்டார்கள். ஏழு மணி ஷ§ட்டிங் என்றால் 6.50 க்கு ஸ்பாட்டில் இருக்கணும். ஐந்து நிமிடம் லேட்டா வந்தால் கூட அவ்வளவுதான். நாங்க ரொம்ப பயந்து பயந்து நடிச்சோம் என்றார்கள் ஒட்டுமொத்தமாக.
கடைசியாக பேச வந்த எஸ்.ஏ.சி நானும் விஜயும் நண்பர்கள் போல பழகிக் கொண்டிருக்கிறோம். அவர் இப்போது உயரத்தில் இருக்கிறார். அவரை வைத்து டைரக்ட் செய்ய எனக்கு பயமாக இருக்கிறது. என் டைரக்ஷனில் நடிக்க முடியாத அளவுக்கு அவர் உயரத்தில் இருக்கிறார். 7 மணிக்கு கால்ஷீட் என்றால் சரியாக அந்த நேரத்துக்கு வரவேண்டும் என்று நான் நினைப்பேன். வராவிட்டால் கோபப்படுவேன். விஜயிடம் ஏன் லேட் என்று கேட்க முடியுமா? ஒரு அப்பாவாக என்னால் கேட்க முடியும். அது வேறு விஷயம். ஆனால், டைரக்டரா அப்படி கேட்க முடியாதே? அவரை வைத்து படம் எடுத்து எங்கள் நட்பை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்று எஸ்.ஏ.சி பேச பேச, தனது இறுக்கமான முகத்தை மாற்றிக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார் விஜய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me