செவ்வாய், 29 ஜூலை, 2008

kuruvi 100 days

கைகோக்கும் ரஜினி-விஜய்



வெள்ளி, 18 ஜூலை, 2008

விஜய் முத்தம் வேண்டும் : ஏங்கும் சோனா

முத்தக்காட்சியா... ம்ஹூம் மாட்டேன்... என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா. மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா.ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னபோது ஷாக்கானார். பிறகு கிளாமர் கேரக்டர் பண்ணப்போறேன் என்றதும் அம்மாவுக்கு இரண்டாவது ஷாக். ஒரு கட்டத்தில் நீ எப்படியோ போ என்று தண்ணி தெளித்து விட்டார்கள்.கிளாமர் கேரக்டர் இல்லாமல் குடும்பப்பாங்கானா வேடங்களிலும் நடிக்க ஆசையிருக்கு. என்ன பண்றது என்னை பார்க்கும் இய்ககுனர்களெல்லாம் கிளாமர் ஆங்கிளில்தான் பார்க்கிறார்கள்.விஜய்யுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு அவர் தயாராக இருக்கனும்,


ரஜினியாகவே விஜய்!


குசேலனில் நடிகராக ரஜினி காந்த் நடிப்பதைப் போல பந்தயம் படத்தில் நடிகராகவே விஜய் நடித்துள்ளாராம்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, நிதின்சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் பந்தயம். இப்படத்தில் விஜய்யின் பரம விசிறி வேடத்தில் நடித்துள்ளாராம் நிதின் சத்யா. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.
இப்படத்தில் விஜய்யும் விஜய்யாகவே ஒரு காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். என்று பெயரிடப்பட்ட படத்தில், பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கின்போது விஜய்யை செட்டில் நிதின் சத்யா சந்திப்பது போல காட்சி வருகிறதாம்.
இப்படி தனதுதந்தையின் படத்தில் கெஸ்ட் ரோலில் வருவது விஜய்க்குப் புதிதல்ல. ஏற்கனவே சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் நாயகன் ரவிகிருஷ்ணா.




Vijay in a movie titled 'MGR' directed by Perarasu




Actor Vijay is playing the lead role in a movie titled 'MGR', directed by Perarasu. Hold your horses and don't jump to conclusions. This is a film within a film.
Vijay's dad S. A. Chandrasekhar is directing a film called 'Pandhayam' with Nithin Sathya donning the lead role. Vijay will be playing himself in the film as a guest performer. Since he plays himself, he will be depicted as though he is shooting for a film under the direction of Perarasu. And that film's title is 'MGR'.The scene was shot in Chennai recently. Nithin Sathya, the hero of 'Pandhayam' plays a die-hard Vijay fan in the film and so goes to see Vijay shooting for a movie. Prakash Raj and Sindhu Thulani also are in the cast. Vijay Anthony has scored the music.It may be recalled that Vijay had earlier acted in a guest role in S A Chandrasekhar's 'Sukkran'.Vijay is meanwhile busy with 'Villu', directed by Prabhudeva and the shooting for the film, produced by Ayngaran Internationals is on at a rapid pace.





விஜய், நயன்தாரா,வில்லு பட டீம் விரைவில் பறக்கப் போகிறது






இளைய தளபதியின் 'வில்லு' படத்திற்காக ஒரு பாடல் இத்தாலியில் படமாக்கப்படுகிறது.இத்தாலியின் இயற்கை அழகு மத்தியிலும், எழில் கொஞ்சும் விளையாட்டு அரங்குகளின் மத்தியிலும், புராதன அரண்மணை மாடங்களிலும், ஆற்றங்கரை வெளிதனிலும் ஆடப் போகிறது விஜய்-நயன்தாரா ஜோடி.அழகிய தமிழ் மகன், குருவிக்குப் பின் வில்லு விஷயத்தில் அம்பாய் பாய்கிறாராம் விஜய். ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த கவனத்தோடும், அக்கரையோடும் நடிக்கிறாராம்.தனது பழைய படங்களின் சாதனையை வில்லு முறியடிக்க வேண்டும் என்று விஜய் முனைப்போடு இருப்பதாலேயே ஒவ்வொரு சீனும் செதுக்கி செதுக்கி எடுக்கப்படுகிறதாம்.விஜய், நயன்தாரா, பிரபுதேவா வில்லு பட டீம் விரைவில் பறக்கப் போகிறது.






வில்லு- கிளாமர் நயன்

விஜய், நயன்தாரா நடிக்கும் வில்லு படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது சிவகாசியில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடிய நயன்தாரா, விஜய்யுடன் ஜோடி சேரும் முதல்படம் வில்லு வில்லு படப்பிடிப்பு பொள்ளாச்சி, பழனி ஆகிய இடங்களில் நடந்தது. நயன்தாராவுக்கு இதில் ஹோம்லி வேடம். அவரை வில்லுவில் ஒப்பந்தம் செயய இதுவும் ஒரு காரணம்.
படப்பிடிப்பு தொடங்கிய பிறகு வெளிவந்த நயன்தாராவின் குசேலன், சத்யம் பட ஸ்டில்களைப் பார்த்து பதறிவிட்டதாம் வில்லு டீம். இந்தக் கவர்ச்சி போதுமா இன்னும் வேணுமா என்ற ரீதியில் இருந்தன அந்த புகைப்படங்கள். டூபீஸ் ரேஞ்சுக்கு இறங்கிய நயனை நாம் மட்டும் ஹோம்லியாக காட்டினால் ரசிகர்கள் கோவிச்சுக்க மாட்டார்களா?
இந்த நியாயமான கேள்வியை தொடர்ந்து நயனை ஹோம்லியிலிருந்து கிளாமருக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளது வில்லு டீம். முக்கியமாக கேரளா அதிரம்பள்ளி அருவியில் ஒருபாடல் காட்சி எடுக்கிறார்களாம், இதில் நயனை நனையவிட்டு ரசிகர்களை சூடேற்ற போகிறார்களாம்.
அப்படின்னா வில்லு இல்ல ஜில்லு!

செவ்வாய், 15 ஜூலை, 2008

விஜயும், நானும் நண்பர்கள், அப்பா எஸ்.ஏ.சி

நிதின்சத்யா தனி ஹீரோவாக நடிக்கும் படம் பந்தயம். துவக்கவிழா கூட இல்லாமல் படத்தை ஆரம்பித்த எஸ்.ஏ.சி, டிரெய்லர் வெளியீட்டு விழாவை அமர்க்களமாக நடத்தினார். தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன், விஜய், சிம்ரன், சிந்து துலானி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
'இந்த கதையை அப்பா என்கிட்ட சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. காரணம், இது எனக்கு பொருத்தமான கதை. ஆனால் எனக்காக அவர் வெயிட் பண்ண தயாராக இல்லை. நிதின் சத்யாவை வைத்து படத்தை துவங்கி விட்டார். நானும் நிதின் சத்யாவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டேன். எனக்கு நிதின் சத்யாவிடம் பிடித்தது அவரது கண்கள்தான். எனக்கு சிறிய கண்கள் என்பதால் பெரிய கண்கள் உள்ளவர்களை எனக்கு பிடிக்கும். விஜயகாந்த் சாருக்கும் அப்படிதான் கண்கள் இருக்கும். இந்த படம் பிரமாதமான ஆக்ஷன் படம். நிதின் சத்யாவுக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும்' என்றார் விஜய்.
படத்தில் நடித்த நடிகர்கள், எஸ்.ஏ.சி யின் கண்டிப்பை பற்றி கொஞ்சம் ஓவராகவே அச்சப்பட்டார்கள். ஏழு மணி ஷ§ட்டிங் என்றால் 6.50 க்கு ஸ்பாட்டில் இருக்கணும். ஐந்து நிமிடம் லேட்டா வந்தால் கூட அவ்வளவுதான். நாங்க ரொம்ப பயந்து பயந்து நடிச்சோம் என்றார்கள் ஒட்டுமொத்தமாக.
கடைசியாக பேச வந்த எஸ்.ஏ.சி நானும் விஜயும் நண்பர்கள் போல பழகிக் கொண்டிருக்கிறோம். அவர் இப்போது உயரத்தில் இருக்கிறார். அவரை வைத்து டைரக்ட் செய்ய எனக்கு பயமாக இருக்கிறது. என் டைரக்ஷனில் நடிக்க முடியாத அளவுக்கு அவர் உயரத்தில் இருக்கிறார். 7 மணிக்கு கால்ஷீட் என்றால் சரியாக அந்த நேரத்துக்கு வரவேண்டும் என்று நான் நினைப்பேன். வராவிட்டால் கோபப்படுவேன். விஜயிடம் ஏன் லேட் என்று கேட்க முடியுமா? ஒரு அப்பாவாக என்னால் கேட்க முடியும். அது வேறு விஷயம். ஆனால், டைரக்டரா அப்படி கேட்க முடியாதே? அவரை வைத்து படம் எடுத்து எங்கள் நட்பை கெடுத்துக் கொள்ள மாட்டேன் என்று எஸ்.ஏ.சி பேச பேச, தனது இறுக்கமான முகத்தை மாற்றிக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார் விஜய்.

புதன், 9 ஜூலை, 2008

Villu Starring Vijay along with Nayathara

Villu Starring Vijay along with Nayathara directed by Prabhu deva and produced by Ayngaran International has commenced shooting in Pazhani on June 6th the shooting will continue till 26th of June, in and around kerala.The film is a racy Entertaintaner with the best commercial aspects needed for a Vijay film.

for kuruvi full movie click hear http://www.tubekolly.com/watch/5b314a80bdcb024f8e42/Kuruvi-Pdvd-rip-

குசேலன் பாடலில் அஜீத், விஜய் நடிக்காதது ஏன்?



குசேலன் பட பாடலில் ரஜினியுடன் அஜீத், விஜய் நடிக்காதது ஏன் என்பதற்கு வாசு விளக்கம் அளித்தார். ரஜினி, நயன்தாரா, பசுபதி நடிக்கும் குசேலன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று சென்னை சாந்தி தியேட்டரில் நடந்தது. படத்தில் ரஜினி, நடிகராகவே நடிக்கிறார். ரஜினியின் படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்கள் பார்ப்பது போன்றும், அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்தார்கள். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ரசிகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ரஜினி ரசிகர்களுடன் 1000 துணை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு நடித்தனர்.பின்னர் இயக்குனர் வாசு கூறுகையில், குசேலன் படத்தில் சினிமா சினிமா... எனத் தொடங்கும் பாடலில் அஜீத், விஜய், விக்ரம் உட்பட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டோம். இப்போது அவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் இத்த¤ட்டத்தை கைவிட்டுள்ளோம் என்றார்.அஜீத், விஜய் உட்பட சில நடிகர்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அவர்கள் நடிப்பார்கள் என வாசு அறிவித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். எங்கள¢ பட ஷ¨ட்டிங்கில் பிசியாக உள்ளோம். இதனால் குசேலனில் நடிக்க முடியாமலும் போகலாம். எங்களிடம் கேட்காமலேயே எப்படி நீங்கள் இவ்வாறு அறிவிக¢கலாம்? என நடிகர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பினர். இதனால் ரஜினியின் ஆலோசனைப்படி முன்னணி நடிகர்களை சேர்க்கும் திட்டத்தை வாசு கைவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன

ரஜினியுடன் விஜய், அஜீத் நடனம்

குசேலன் படத்தில் ரஜினியுடன் ஒரு பாடல் காட்சியில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா நடிக்கின்றனர்.ரஜினி, நயன்தாரா, பசுபதி, மீனா நடிக்கும் படம் குசேலன். கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்தது. படம் பற்றி இயக்குனர் வாசு, நிருபர்களிடம் கூறியதாவது:சினிமா... சினிமா... எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா வருமா என்று அப்பாடல் தொடங்குகிறது. இப்பாடலை மட்டும் படமாக்க உள்ளோம். இதில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம், தனுஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.ஜூலை மாதம் படம் ரிலீஸ். இவ்வாறு பி.வாசு கூறினார். தயாரிப்பாளர்கள் புஷ்பா கந்தசாமி, விஜயகுமார் உடனிருந்தனர்.

விஜய்-த்ரிஷா நட்பு தமிழ்சினிமாவில் பரபரப்பு

தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு
பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே 'அட போங்கப்பா' என்று எண்ணிக் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் 'த்ரிஷா வேண்டும் என்றார் விஜய். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை கொடுத்தது. கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய், த்ரிஷாவுடனான நட்பை விஜய் துண்டித்துக் கொண்டதுதான் என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள் விஜயின்ரசிகர்கள். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!

விஜய் ஒரு தெளிவான ஹீரோ...

நிஜத்தில் எப்படியோ... சினிமாவில் அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டே இருந்தால்தான் பரபரப்பும் சுவாரஸ்யமும் இருந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது. முன்பு 1970ஆம் ஆண்டு அன்றைய சூப்பர்ஸ்டார் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் 8.அனைத்துப் படங்களிலும் எம்ஜிஆரின் ஜோடி ஜெயலலிதாதான். இந்த எட்டுப் படங்களுமே வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு அப்படியெல்லாம் ஒரே ஜோடியுடன் எந்த ஹீரோ நடித்தாலும் ஒப்புக் கொள்வதில்லை ரசிகர்கள். முன்னணி நடிகரான விஜய்யும்கூட அதற்கு விதிவிலக்கல்ல...கில்லி படம் வெளி வந்ததும் தமிழ் சினிமாவின் அசத்தல் ஜோடி விஜய் - த்ரிஷாதான் என்றார்கள். ஏற்கெனவே இந்த இருவரும் திருப்பாச்சியில் ஜோடி போட்டு, அந்தப் படமும் வெற்றி விழா கண்டிருந்தது.விஜய்யையும் த்ரிஷாவையும் சேர்த்து ஒரு படத்தில் புக் செய்வது தயாரிப்பாளரின் அதிர்ஷ்டம் என்று பேசப்பட்டது.அந்த நேரத்தில்தான் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் அசின், சிவகாசியில். படம் சூப்பர் டூப்பர் கலெக்ஷன். அடுத்த படத்திலேயே மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா, ஆதியில். விஜய்யின் மோசமான பட வரிசையில் அந்தப் படம் இடம் பிடித்துக் கொள்ள, அடுத்த படமான போக்கிரியில் மீண்டும் அசின். இருநூறு நாள் படமாக அமைந்தது போக்கிரி.விசாரித்தால், விஜய் ஒரு தெளிவான ஹீரோ... யாருக்கு கமர்ஷியல் மார்க்கெட் உள்ளதோ அவர்களை தன் படத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அந்த வகையில்தான் இப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நாயகியாகத் திகழும் நயன்தாராவைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். மற்றபடி விஜய்யின் கொடி அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நயன்தாராவின் தனிப்பட்ட விருப்பம் என்றார் விஜய்யின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர்.

சனி, 5 ஜூலை, 2008

'அரசியல் ஆசையில்லை விஜய் பரபரப்பு பேச்சு


'அவரும் நானும் நண்பர்கள் மட்டுமே' என்று நடிகைகளும் 'அரசியல் ஆசையில்லை நாளை எதுவும் நடக்கலாம்' என நடிகர்களும் சொல்லும் வசனத்தை நம்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு விஜய்யும் ஒரு லேட்டஸ்ட் வசனத்தை எடுத்துரைத்துள்ளார்.அரசியலுக்கு வருவீர்களா? என விஜய்யிடம் மீடியாக்கள் சில வருடங்களாக கேட்ட கேள்விக்கு நேற்று இருவேறு விதமான விடை கிடைத்தது.விஜய்க்கு நேற்று பிறந்த நாள். தனது ரசிகர்களுடன் அவர் இதனை கொண்டாடிய இடம் அரசுக்கு சொந்தமான சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடம்.தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.பி.சௌத்ரி, ஏ.எம்.ரத்னம் லண்டன் கருணாகரன், நடிகர்கள் சத்யராஜ், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ஸ்ரீமன், தாமு நடிகை நயன்தாரா ஆகியோர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்த பிறந்த நாளில் கூடுதல் விஷேசமாக ரசிகர் நற்பணிமன்ற கொடியை அறிமுகப்படுத்தினார் விஜய். வெள்ளை நிறத்திற்குள் நீல நிற வட்டமிட்டிருந்த கொடியில் வெள்ளை ஆடையில் விஜய் ஆள் காட்டி விரலை காட்டிக் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. உழைத்திடு, உயர்ந்திடு, உன்னால் முடியும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.வாழ்த்துரை வழங்கிய சத்யராஜ், எம்ஜிஆர் படங்களுக்கு பிறகு விஜய்யின் படங்கள்தான் தன்னை கவர்ந்துள்ளதாகவும், புரட்சித்தலைவரின் பாடல்களுக்கு பிறகு விஜய்யின் பாடல்களில்தான் சமூக சிந்தனை உள்ளதாகவும் பேச 'சத்யராஜா இப்படி...' என நெளிந்த மீடியாக்காரர்கள் நிறைய.விஜய்யின் தந்தையும் விஜய் ரசிகர் மன்ற கௌரவத் தலைவருமான எஸ்.ஏ.சி. பேசும்போது இளைய தளபதியின் அரசியல் பிரவேசம் உறுதி என்பதுபோன்ற தொணியில் உணர்ச்சிவசப்பட்டார்."விஜய்க்கு நான் நடிகன் என்ற ரோடு மட்டுமே போட்டுக்கொடுத்தேன். அதில் ஓடி வெற்றிபெற்றதெல்லாம் அவர்தான். அதேபோல் இன்று ஒரு ரோடு போடப்பட்டுள்ளது (கொடி அறிமுகத்தை சுட்டிக்காட்டினார்) நாளை இது எப்படி மாறும் என்று இப்போதைக்கு சொல்லமுடியாது. நேற்று தொண்டு செய்தவர்களெல்லாம் இன்று தலைவர்களாக உள்ளனர். இன்று தொண்டு செய்பவர்கள் நாளைய தலைவராகலாம். விஜய் இப்போது தொண்டு செய்து வருகிறார்" என சூசகமாக பேசினார்அப்பாவின் பேச்சு மேற்கு நோக்கி இருக்க, விஜய்யின் பேச்சோ வேறு திசையில் இருந்தது."ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே இந்த கொடியை அறிமுகப்படுத்தினோமே தவிர அரசியல், கட்சி என்ற எண்ணம் எதுவுமில்லை. அரசியல் என்பது சாதாரணமான காரியம் இல்லை. பல கட்சியை சேர்ந்தவர்கள் எனது ரசிகர்களாக இருக்கும்போது நான் ஒரு கட்சியை தொடங்க வேண்டிய நிலையில் இல்லை. கட்சி தொடங்கினால் நடிகனாக நிறைய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று விஜய் பேச, எஸ்.ஏ.சந்திரசேகரின் முகத்தில் ரசாயண மாற்றம் ஏற்பட்டதை பார்க்கமுடிந்தது.
விழாவில் கறிவேப்பிலை மாதிரி ஒட்டிக் கொண்டார் நயன்தாரா. இவ்வளவு ஆரவாரம், கொடி, கோஷங்கள் என்பதை பார்த்து மிரண்டு போனாரோ என்னவோ, ஓரிரு வார்த்தைகளில் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அமர்ந்தார்