சனி, 30 ஜனவரி, 2010

ஏப்ரலில் சுறா..!- சன் அறிவிப்பு

விஜய் நடிக்கும் சுறா திரைப்படத்தை வாங்கியிருப்பது உண்மைதான் என்றும், அந்தப் படம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் நடிக்கும் 50 வது படம் இது.

சங்கிலி முருகன் தயாரிப்பில், எஸ்பி ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் தமன்னா. முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.சோட்டா மும்பை எனும் மலையாளப் படத்தின் தழுவலான இந்தப் படத்தில் மீனவராக வருகிறாராம் விஜய்.


இதற்காக தமிழகம், பாண்டிச்சேரி பகுதி கடற்கரையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர். இன்னும் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இவை வெளிநாட்டில் படமாக்கப்படுமாம்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது சன் பிக்சர்ஸ்.


இதுகுறித்து கூறுகையில், சுறா திரைப்படத்தை சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது என்றும், வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாகும் என்றுன் சன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே விஜய் நடித்த வேட்டைக்காரனையும் சன் வெளியிட்டது

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Who is the hero in this film??

venkat சொன்னது…

hi ur blog is very nice..keep rocking..

http://vvijayy.blogspot.com

கருத்துரையிடுக

talk me