
ரெண்டு படத்தோடு தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா. இப்போது அங்குள்ள ஹீரோயின்களை உண்டு, இல்லை என பண்ணி வருகிறார் தனது அருந்ததி மூலம். தமிழிலும் அருந்ததீ என்ற பெயரில் அப்படம் ரிலீஸாகி அனுஷ்காவின் பக்கம் கோலிவுட் பார்வையைத் திருப்பியுள்ளது. அவரைத் தேடி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ்ப் பட வாய்ப்புகளும் நிறைய வருகின்றன. தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுவுடனும், தமிழில் விஜய் மற்றும் கார்த்தியுடனும் இணைந்து நடிக்கிறார் அனுஷ்கா.
விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. வேட்டைக்காரன் அனுபவம் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறதாம் அனுஷ்காவுக்கு. விஜய்யுடன் நடிப்பது சுலபமல்ல. அவர் சிறந்த நடிக்ர. அவரது பன்ச் ரொம்பப் பிரபலமானது. அவருடன் நடித்த நாட்கள் மறக்க முடியாதவை என்கிறார் அனுஷ்கா.
வேட்டைக்காரனில் விஜய் மகன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்த நேரம் தனது மகனை தோளில் சுமந்தபடி மைதானத்துக்கு வந்தது பலரின் புருவங்களை உயரச் செய்தது.
இதோ அடுத்த அதிரடியாக தனது மகனை வேட்டைக்காரன் படத்தில் அறிமுகப்படுத்தப் போகிறார். விஜய் ரசிகர்கள் போஸ்டரில் படம் போட இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me